Sarkar vs Vivegam

Sarkar Vs Vivegam : விவேகத்தை காட்டிலும் சென்னையில் சர்கார் பட வசூலுக்கு பலத்த அடி விழுந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சர்கார். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இருப்பினும் முதல் இரண்டு நாட்களுக்கு வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் மூன்றாம் நாள் சென்னை வசூல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆம், முதல் இரண்டு நாட்களில் ரூ 4 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த சர்கார் படம் மூன்றாவது நாளில் ரூ 1.27 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

மேலும் விவேகம் படம் சென்னையில் மூன்றாம் நாளில் ரூ 1.52 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது சர்கார் படத்தின் வசூல் விவேகத்தை காட்டிலும் குறைவாக வந்திருப்பது தளபதி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சை காட்சிகளும் தற்போது நீக்கப்பட்டு விட்டதால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்குமா? என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.