சர்கார் டீஸர் வெளியாகி உலக அளவில் சாதனை படைத்து வந்தாலும் தனுஷை அசைக்க முடியலையே என தனுஷ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீஸர் நேற்று மாலை இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த டீஸர் உலக அளவில் மிக பெரிய சாதனைகளை படைத்து வருகிறது.

இருப்பினும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தனுஷை அடித்து கொள்ள முடியவில்லை. வடசென்னை படத்தினுடைய ஹேஸ்டேக் தான் பல நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

சர்கார் டீஸர் வெளியாகி சில மணி நேரங்கள் மட்டுமே சென்னை அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து இருந்தது. அதன் பிறகு மீண்டும் பழையபடி வடசென்னை முதலிடத்தை பிடித்து விட்டது. இதனை தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.