தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தீபாவளி விருந்தாக தளபதி விஜயின் சர்கார் படத்தை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளது.

அதே போல  என்னை நோக்கி பாயும் தோட்டா படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இன்னும் அனுமதி வழங்காமல் பரிசீலனையில் வைத்துள்ளது. இதனால் தனுஷின் ENPT தீபாவளிக்கு வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ENPT படம் மட்டுமில்லாமல் தீபாவளிக்கு வெளியாகும் என கூறியிருந்த பில்லா பாண்டி, திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களின் ரிலீஸையும் பரிசீலனையிலேயே வைத்துள்ளது.