Sarkar Cutout

Sarkar CutOut : தளபதி விஜயின் சர்கார் பட ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக ஒன்னு அல்ல இரண்டு அல்ல 175 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் தீபாவளி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த படத்திற்கான கொண்டாட்டத்தை தளபதி விஜயின் ரசிகர்கள் தற்போதில் இருந்தே தொடங்கி விட்டனர்.

தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் தளபதி விஜய்க்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதனால் தற்போது கேரளாவை சேர்ந்த தளபதி ரசிகர்கள் 10 இல்ல 20 இல்ல 175 அடியில் பிரம்மாண்டமாக விஜய்க்கு கட் அவுட் வைத்துள்ளனர்.

அவர்கள் கட் அவுட் வைத்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த கட் அவுட்டை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கேரளாவிற்கு படையெடுத்துள்ளனர்.

Thalapathy Cut Out

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.