Sarkar USA Collection

Sarkar USA Collection : தளபதி விஜயின் சர்கார் படம் இந்தியாவை போலவே அமெரிகாவையும் அதிர வைத்துள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த சர்கார் படம் உலகம் முழுவதும் நேற்று தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சர்கார் படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்ததால் முதல் நாள் வசூலும் தாறுமாறாக இருந்தது. சென்னையில் மட்டுமே ஒரே நாளில் ரூ 2.37 கோடி வசூல் செய்து தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்தது.

இதனையடுத்து தற்போது அமெரிக்கா வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. அது என்னவென்றால் $330 K வசூலுடன் வீக் டே ரேங்கில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

எந்தவித ப்ரோமோஷனும் இல்லாமல் அமெரிக்காவில் இப்படியான சாதனையை சர்க்கார் படம் படைத்து இருப்பது ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

அமெரிக்காவில் சர்கார் படத்தை நர்மதா ட்ராவல்ஸ் அண்ட் கோலிவுட் மூவிஸ் USA ஆகியன நிறுவனங்கள் இணையானது வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.