Sarkar US Collection

Sarkar US Collection : தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் அமெரிக்க பிரீமியர் காட்சிகளின் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.

உலகம் முழுவதும் தீபாவளியான இன்று ( நவம்பர் 6 ) வெளியாக உள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் அமெரிக்காவில் சர்கார் படத்தின் பிரீமியர் காட்சிகள் முடிவடைந்துள்ளன.

இதனையடுத்து தற்போது அந்த பிரீமியர் காட்சிகளின் வசூல் நிலவும் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் மொத்தம் 115 இடங்களில் திரையிடப்பட்ட பிரீமியர் காட்சிகளின் மூலம் 150 K டாலர் வசூல் செய்துள்ளது.

இது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான படத்தின் வசூல் நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசூல் மெர்சல் படத்தை விட 20 டாலருக்கும் அதிகமான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் தற்போது தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் சர்கார் படத்தின் வெளிநாட்டு விமர்சனங்களும் வெளியாகத் தொடங்கி விடும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்,