சர்கார் டிக்கெட் புக்கிங்

சர்கார் டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நிமிடங்களிலேயே முடங்கி போயுள்ளது.

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு, பழ.கருப்பையா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் இணையதளங்களில் இன்று தொடங்கி இருந்தது. புக்கிங் தொடங்கிய சில மணி நிமிடங்களிலேயே சர்வர் பிஸியாக முடங்கி போயுள்ளது.

இதனால் தளபதி ரசிகர்கள் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாமல் தவித்துள்ளனர். அதன் பின்னர் சர்வர் சரி செய்யப்பட்டதும் புக்கிங் விறுவிறுப்பாக நடந்துள்ளது.

பல இடங்களில் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தியேட்டர் ஹவுஸ் புல்லாகி உள்ளது. மதுமட்டுமில்லாமல் கிட்ட தட்ட தீபாவளி முதல் அடுத்த மூன்று வரை பல இடங்களில் ஹவுஸ் புல்லாகி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.