
தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக், பாடல்களுக்கு பிறகு தளபதி ரசிகர்கள் அனைவருமே சர்கார் டீஸருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம், ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே வரும் அக்டோபர் 19-ம் தேதி சர்கார் படத்தின் டீஸர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த டீவீட்டில் சர்க்கார் டீஸர் மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் அக்டோபர் 19-ம் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
#SarkarTeaserOn19th@actorvijay @ARMurugadoss @arrahman @KeerthyOfficial @varusarath pic.twitter.com/je2qdA1g64
— Sun Pictures (@sunpictures) October 10, 2018
https://platform.twitter.com/widgets.js