தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் பாடல்கள் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் சூப்பர் டூப்பர் வரவேற்பை பெற்றிருந்தன.
இதனையடுத்து தற்போது சர்கார் படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த தகவலும் கசிந்துள்ளது. ஆம், வரும் ஆயுத பூஜை அன்று சர்க்கார் படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன ரசிகர்களே கொண்டாட தயாரா?