
சர்கார் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
மேலும் இப்படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 19-ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தில் விஜயின் டான்ஸ் குறித்து ஸ்ரீதர் மாஸ்டர் பேசியுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஸ்ரீதர் மாஸ்டர், சர்கார் பாடலிலும் விஜயின் டான்ஸ் சூப்பராக இருக்கும். தலைவா படத்தை போல இந்த படத்திலும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் உள்ளது என கூறியுள்ளார்.
Sridhar master shares his experiences from the sets of Sarkar.#SarkarKondattam #Sarkar pic.twitter.com/uhP14hEbFs
— Sun Pictures (@sunpictures) October 13, 2018
https://platform.twitter.com/widgets.js