தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் கதை என்னுடையது என பரபரப்பை கிளப்பியுள்ளார் உதவி இயக்குனரான வருண்.

இது குறித்து வருண்  கூறியதாவது, செங்கோல் என்ற பெயரில் நான் இந்த படத்தை கதையை எழுதி அதனை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் இந்த படத்தின் கதையை திருடி சர்கார் என்ற பெயரில் உருவாக்கி வருகிறார் என புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து தற்போது எழுத்தாளர் சங்கத்தில் இந்த புகாரின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இது தளபதி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக முருகதாஸ் இயக்கி இருந்த கத்தி படத்தின் கதையிலும் இதே பிரச்சனை ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here