Sarkar Udhayanidhi review

Sarkar Premier Show : சர்கார் படத்தை பற்றிய தவறான தகவல்கள் சமூக வளையதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்க்கார்.

இந்த படத்தின் பிரீமியர் காட்சிகள் இன்னும் சில மணி நேரங்களில் அமெரிக்காவில் திரையிடப்பட உள்ளன. இந்நிலையில் சமூக வளையதளங்களில் படத்தை பற்றிய சில விமர்சனங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன.

இது குறித்து தற்போது விசாரிக்கையில் அமெரிக்காவில் பிரீமியர் காட்சிகள் இன்னும் தொடங்கவே இல்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் சர்கார் விமர்சனம் என இதுவரை வெளியான கருத்துகள் தவறாக பரப்பப்பட்டவை என்பதை உறுதியாகியுள்ளது.

பிரீமியர் காட்சிகள் முடிவடைந்ததும் சர்கார் படத்தின் மக்களின் கருத்துகள் வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.