Sarkar ரிலீஸ் தேதி

Sarkar Release : சர்கார் ரிலீஸ் தேதியால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் தளபதி விஜய்க்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முருகதாஸ் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்த படத்தை நவம்பர் 2-ம் தேதியே வெளியிட திட்டமிட்டுள்ளது.

நவம்பர் 2-ம் தேதி வெளியிட்டால் ஒரு வாரத்திற்கு நல்ல வசூல் வரும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் கணக்கு போட்டுள்ளது.

ஆனால் விஜய் தீபாவளிக்கு தான் வெளியாக வேண்டும், என ரசிகர்களும் அதை தான் எதிர்பார்ப்பார்கள் என கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் படத்தை சென்சார் போடிற்கு இந்த வாரமே அனுப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நவம்பர் 2-ம் தேதி படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.

படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்களும் நவம்பர் 2-ம் தேதியே வெளியிடுமாறு வற்புறுத்தி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.