Sarkar Release Date

Sarkar Release Date : தளபதி விஜயின் சர்கார் படம் தீபாவளிக்கு முன்னரே வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சர்கார் படம் வரும் தீபாவளி சரவெடியாக வெளியாகும் என கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தீபாவளி நவம்பர் 6 செவ்வாய் கிழமையில் வருவதால் சர்கார் ரிலீஸ் தேதி தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது பிரபல நாளிதழில் சர்கார் படத்தை வரும் நவம்பர் 2-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டம் தீட்டி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனால் தீபாவளிக்கு முன்னரே தளபதி தரிசனம்.. தெறிக்க விடுவோம் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர்.

சர்கார் ரிலீஸ் தேதி

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.