Sarkar Premier

Sarkar Premier : சர்கார் படத்தின் பிரீமியர் ஷோவிற்கான டிக்கெட்களை புக் செய்பவர்களுக்கு டி-ஷர்ட் பரிசாக அளிக்கப்படும் என அமெரிக்காவில் சர்கார் படத்தை வெளியிடும் நர்மதா டிராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் USA நிறுவனம் அறிவித்துள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 6-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

அமெரிக்காவில் இந்த படத்தின் பிரீமியர் காட்சிகள் நவம்பர் 5ம் தேதியே வெளியாக உள்ளது.

பிரீமியர் காட்சிகளுக்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கியுள்ளது. இணையதளத்தில் முதலில் டிக்கெட் புக் செய்யும் 25 பேருக்கு சர்கார் டி-ஷர்ட் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

விதிமுறைகள் :

  1. மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் குறைந்தது ஒரு டிக்கெட்டாவது பதிவு செய்ய வேண்டும்.
  2. டிக்கெட் ஒன்றிற்கு ஒரு நபர் மட்டும் தான் படம் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
  3. பதிவு செய்த டிக்கெட் காபியை ட்விட்டர் அல்லது முகநூல் பக்கத்தில் @sarkarinusa என்ற id-க்கு டேக் செய்து #SarkarUSPremiers என்ற ஹாஸ்டேக்கில் பதிவிட வேண்டும்.
  4. முதலில் பதிவு செய்யும் 25 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  5. இந்த போட்டி வரும் ஞாயிற்று கிழமை இரவு 11.59 PM-க்கு முடிவடையும்.
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.