தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் வியாபாரமும் பரபரப்பாக நடந்து வருகிறது. ஓவர்சீஸ் வியாபாரத்தில் சர்கார் படம் ரூ 25 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஓவர்சீஸ் வியாபாரத்தில் அதிக தொகைக்கு விற்பனையான படமும் சர்கார் தான் என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.