Sarkar Official Update

Sarkar Official Update : முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

விஜயுடன் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்த படம் திடீரென நவம்பர் 2-ம் தேதியே வெளியாக இருப்பதாக நேற்று தகவல்கள் வைரலாகி இருந்தன.

தற்போது இந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் சர்கார் நவம்பர் 6 தீபாவளிக்கு அன்று தான் ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here