Sarkar Celebration, Sarkar Updates, Thalapathy in sarkar, Thalapathy in sarkar, Sarkar Kondaattam

Sarkar Celebration in Mumbai : தளபதி விஜயின் சர்கார் படம் தமிழகத்தை மட்டுமில்லாமல் வடமாநிலங்களிலிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படம் கதை திருட்டு விவகாரம் என நீதிமன்ற வழக்குகளை சந்தித்து வந்தாலும் எதிர்பார்த்தபடி நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி ரசிகர்களும் அதே நம்பிக்கையில் தான் இந்த வருட தீபாவளி தளபதி தீபாவளியாக இருக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த எதிர்பார்ப்பு தமிழகத்தில் மட்டுமில்லாமல் வடமாநிலங்களிலும் நிலவி வருகிறது. ஆம், மும்பையில் உள்ள PVR சினிமா தியேட்டரில் சர்கார் படத்திற்கான கொண்டாட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

அதன் வீடியோ ஒன்றை ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதோ நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.