
Sarkar Issues : சர்கார் ஒரு குப்பை படம், படத்தில் விஜய் பேசியவையும் இந்த படத்தை போலவே குப்பை போலவே உள்ளது என காட்டமாக பேசியுள்ளார் பிரபலம் ஒருவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இறுதியாக துப்பாக்கி, கத்தி என மெகா ஹிட் படங்களை கொடுத்த முருகதாஸுடன் இணைந்திருந்த சர்கார் படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இந்த படம் விஜய் முருகதாஸ் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்றிருந்த கத்தி, துப்பாக்கி படங்களை போல இல்லை என்பதே இன்று வரை பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது பிரபல எழுத்தாளரான சாருநிவேதிதா சர்கார் ஒரு குப்பை படம். இதில் விஜய் பேசிய அரசியல் வசனங்களும் படத்தை போலவே குப்பையாக இருப்பதாக காட்டமாக பேசியுள்ளார்.
எழுத்தாளர் சாருநிவேதிதா இவ்வாறு பேசி இருப்பது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தளபதி ரசிகர்கள் பலரும் எழுத்தாளரை தாக்கி பேசி வருகின்றனர்.