Sarkar Issue & Murugadoss Reply

Sarkar Issue & Murugadoss Reply : தளபதி விஜயின் சர்கார் பிரச்சனை இன்று வரை தொடர்ந்து வந்த நிலையில் தற்போது இது குறித்து அதிரடியாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார் முருகதாஸ்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த சர்கார் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

படம் ரிலீஸாவது முன்பு கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய இந்த படம் ரிலீசுக்கு பிறகு அரசின் இலவச திட்டங்களை விமரித்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அதன் பின்னர் படத்தில் இருந்து சர்ச்சை காட்சிகளை படக்குழுவினர் நீக்கி இருந்தனர்.

இருப்பினும் தமிழக அரசு எங்களது திட்டங்களை விமரித்ததற்காக முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது.

இது குறித்து தற்போது முருகதாஸ் அதிரடியான தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார்.

அதாவது இலவச திட்டங்களை விமர்சனம் செய்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது.

அதுமட்டுமில்லாமல் இனி வரும் படங்களில் விமரிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் தர முடியாது என கூறியுள்ளார்.

முருகதாஸின் இந்த பதிலுக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது.

அதே சமயம் நடிகர் கமல்ஹாசனும் ஆதரவு அளித்து ட்வீட் செய்துள்ளார். கமல்ஹாசனின் ஆதரவிற்கு முருகதாஸ் நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.