Sarkar Chennai Collection

Sarkar Chennai Collection : தளபதி விஜய்யின் சர்கார் படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் புரட்டிப் போட்டுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு, பழ கருப்பையா என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த படம் சர்கார்.

தீபாவளியான நேற்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதன் விளைவாக சென்னையில் மட்டுமே முதல் நாளில் ரூபாய் 2.37 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே சென்னையில் நாள் வசூல் ரூபாய் 2 கோடியை தாண்டியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயின் இந்த பிரம்மாண்ட சாதனையை தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதுமான வசூல் நிலவரம் 30 கோடியை நெருங்கும் எனவும் கூறப்படுகிறது.