Sarkar Celebrity Tweet

Sarkar Celebrity Tweet  : சர்கார் படம் ஏமாற்றத்தை கொடுத்து விட்டதாக கோபத்துடன் பிரபலம் ஒருவர் ட்வீட் செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த படம் சர்கார்.

தீபாவளி விருந்தாக நேற்று முதல் உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருப்பினும் படத்தின் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கியமான விசியம் ஒன்று இடம் பெற்று இருப்பதால் விமர்சனங்களை தாண்டி பாராட்டை பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று சர்கார் படம் பார்த்த நடிகரும் நடன இயக்குனருமான சதிஷ் சர்கார் படத்தில் பாடல்கள் தனக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக கோபத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

இதனால் தளபதி ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.