தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க முருகதாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் சர்க்கார் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பல இடங்களில் ரசிகர்கள் தற்போதில் இருந்தே கொண்டாட்டத்தையும் தொடங்கி விட்டனர்.

தற்போது இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்கள் சர்கார் படத்திற்காக தியேட்டர்களில் சர்க்கார் பேனரை வைத்து விஜயின் சர்கார் தீபாவளிக்காக காத்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த புகைப்படங்களை தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.