Sarkar 50th Day

Sarkar 50th Day : சர்கார் படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் பிரபல திரையரங்கையே அதிர வைத்துள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த படம் சர்கார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

கடந்த தீபாவளிக்கு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வந்தது. அதே சமயம் பல்வேறு சாதனைகளையும் படைத்து வந்தது.

சமீபத்தில் இப்படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோகினி தியேட்டரில் நடைப்பெற்றது.

அப்போது கொண்டாட்டத்தின் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் தன்னுடைய சமூக வளையதள பக்கத்தில் வெளியிட அதனை ரோகினி தியேட்டர் உரிமையாளரான ரேவநாத் சரண் ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.