Sarkar 2 Weeks Collection

Sarkar 2 Weeks Collection : சர்கார் படத்தின் வசூல் இரண்டே வாரத்தில் பல நூறு கோடிகளை தாண்டி மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் தளபதியும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்க கூடிய நடிகர் என்றால் அது விஜய் தான்.

இவர் இறுதியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி இருந்த சர்கார் படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் வேற லெவலில் வேட்டையாடி வருகிறது.

படம் வெளியாகி இரண்டு வாரங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வரை உலகம் முழுவதில் இருந்தும் ரூ 247 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தியாவில் மட்டும் சர்கார் வசூல் ரூ 170 கோடியை தாண்டியுள்ளது. மேலும் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டு வரும் அனைத்து தியேட்டர்களிலும் குறைந்தது 60 % சீட்களாவது புல்லாகி விடுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறி உள்ளனர்.