நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் “சர்தார்”. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்க ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் சர்தார்!!.. எப்போது தெரியுமா?? படக்குழு வெளியிட்ட தகவல் இதோ!.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. ரசிகர்களின் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படம் தமிழில் 100₹ கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் 18ஆம் தேதி ஆஹா தமிழ் OTT தளத்தில் வெளியாக உள்ளது.