சர்தார் 2 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தற்போது ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்து இருந்த ‘சர்தார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் கடந்த ஆண்டு “சர்தார்” திரைப்படம் வெளியானது. இதில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியாகி இருந்த இப்படம் ரூ.100 கோடி வரை வசூலை குவித்து மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. ஏற்கனவே இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் அறிவிப்பை படகுழு அறிவித்திருந்த நிலையில் தற்போது ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.