வெளியே வந்ததும் பிரதீப் ஆண்டனிக்கு போன் போட்டு மன்னிப்பு கேட்டதாக சரவண விக்ரம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த வாரம் விக்ரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த விக்ரம் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் பிரதீப் ஆண்டனிக்கு போன் போட்டு மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்ளே பெண்கள் எல்லோரும் அவரைப் பற்றி புகார் கூறினார்கள் அதனால் அந்த சூழ்நிலையில் நானும் அப்படி சொல்ல வேண்டியதாகிடுச்சு.
வெளியே வந்த பிறகுதான் அவருக்கு எவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்கிறது என்பது தெரிகிறது. அதனால் அவருக்கு போன் போட்டு மன்னிப்பு கேட்டேன் என தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் எதையும் தீர விசாரிக்க வேண்டும் பத்தில் பதினோராவது ஆளாக இருக்கக் கூடாது என கருத்து கூறி வருகின்றனர்.