Saranya Ponvannan Daughter Engagement photos

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நிச்சயம் நடந்து முடிந்துள்ளது.

Saranya Ponvannan Daughter Engagement photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சரண்யா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 8 ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலும் அவர் நடிக்கவில்லை. ஆனால் பிறகு பெரும்பாலான திரைப்படங்களில் கதாநாயகனுக்கு அம்மா வேடத்தில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் ராம், தவமாய் தவமிருந்து, எம் மகன், களவாணி, போன்ற திரைப்படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதையும் பெற்றார்.

சரண்யாவிற்கு பொன்வண்ணன் உடன் திருமணமாகி பிரியதர்ஷினி, சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தற்போது பிரியதர்ஷினிக்கு சென்னையில் பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் முடிந்தது.

அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.