நடிகர் சந்தானத்தின் ‘குலு குலு’
படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

முதலில் காமெடி நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்து முன்னணி காமெடி நட்சத்திரமாக பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் சந்தானம் தற்போது முழு ஹீரோவாகவே தன்னை மாற்றிக் கொண்டு பல படங்களை வரிசையாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் படம் தான் “குலு குலு”. இப்படத்தை மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்தினகுமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார்.

இப்படம் ஜூலை 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் ‘குலு குலு’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. எப்போதும் காமெடியோடு பல பஞ்சுகளை பேசி நடித்திருக்கும் சந்தானம் இந்த படத்தில் மிகவும் எமோஷனலாகவும் எதார்த்தமாகவும் நடித்திருப்பதால் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் இடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ ரசிகர்களின் இடையே ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

YouTube video