விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் லேட்டஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் அரசியல் தவிர்க்க முடியாத நடிகராகவும் தலைவராகவும் இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக காலமானார்.
இவர் மண்ணை விட்டு பிரிந்தாலும் இவருடைய நினைவுகள் இன்னும் மக்களின் மனதில் மறையாமல் இருந்து வருகிறது. இவருடைய மகன் சண்முக பாண்டியன் மதுரவீரன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிய இருந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
படைத்தலைவன் என்ற பெயரில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஏற்கனவே வித்தியாசமான லிப்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
வேற மாதிரி லுக்கில் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.