கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சஞ்சீவ். மேலும் இவர் வெள்ளித்திரையில் இங்கிலீஷ் படம் என்ற படத்தில் கூட ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

நேரமே சரியில்ல.. கயல் சீரியலில் இருந்து விலக்குகிறாரா ஹீரோ சஞ்சீவ்?? வெளியான ஷாக் தகவல்

இதனையடுத்து சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் நாயகி ஆக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். கயல் மற்றும் எழில் என இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படியான நிலையில் சஞ்சீவ் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல் பரவி வருகிறது. இதனால் கயல் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆலியா மானசா நடிக்க உள்ள சீரியலில் இவர் ஹீரோவாக போகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நேரமே சரியில்ல.. கயல் சீரியலில் இருந்து விலக்குகிறாரா ஹீரோ சஞ்சீவ்?? வெளியான ஷாக் தகவல்

ஒருவேளை சஞ்சீவ் விலகுவது உறுதியானால் எழில் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.