Sanjeev & Vijay :

Sanjeev & Vijay : விஜயோட படம் பார்க்க FDFS படம் பார்க்க போயிட்டா ஒரே டார்ச்சர் தான், படமே பார்க்க முடியாது என என பிரபல நடிகரான சஞ்சீவ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தொகுப்பாளரும் நடிகருமான சஞ்சீவ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் விஜயை பற்றி பல சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். விஜய் படம்னு இல்ல இதுவரை எந்த படத்தையும் நான் FDFS பார்த்ததே இல்லை.

இந்த முறை சர்கார் படத்திற்காக ரசிகர்களுடன் குடியாத்தம் சென்று படம் பார்த்தேன். அப்போது அவர்களது கொண்டாட்டத்தை பார்த்து விஜய்க்கு இப்படியொரு மரியாதையானு மிரண்டு போய்ட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தை நேரில் பார்ப்பாரா? என கேட்டதற்கு நிச்சயம் பார்ப்பார். ஆனால் எந்த தியேட்டரில் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

அவர் மட்டும் தான் சென்று பார்ப்பார். அவரோட நீங்க முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்து இருக்கீங்களா? என கேட்டதற்கு இல்லை என கூறியுள்ளார்.

மேலும் விஜய் முகமூடி போட்டு கிட்டு தான் படம் பார்ப்பான். அதுவும் படம் தொடங்கி 15 நிமிடம் கழித்து தான் உள்ளே செல்வார்.

இடைவெளிக்கு முன்னரே வெளியே வந்து விடுவார். அதன் பின்னர் மீண்டும் படம் தொடங்கி சிறிது நேரம் கழித்து உள்ளே செல்வார்.

படம் முடிய 10 நிமிடம் ஆவதற்கு முன்பே வெளியே வந்து விடுவார். நமக்கு படம் முழுசா பார்க்கணும். அவரோட போனால் அப்படி பார்க்க முடியாது. டென்ஸாகிடும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.