Jason Vijay

Sanjay Vijay : நடிப்பு இயக்கத்தையும் தாண்டி தற்போது தன்னை தொகுப்பாளராகவும் வெளிக்காட்டியுள்ளார் தளபதி விஜயின் மகன் சஞ்சய்.

தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டார் தளபதி விஜய். இவருடைய மகன் ஜேசன் சஞ்சய். இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் நியூ இயர் ஸ்பெஷலாக ஜங்ஷன் என்ற பெயரில் குறும்படம் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் தற்போது தொகுப்பாளராகவும் மாறியுள்ளார். ஆம், தமிழ் சினிமாவில் இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கரை இன்டெர்வியூ எடுத்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக தளபதி ரசிகர்களும் சமூக வளையதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

ஜேசன் சஞ்சய் தற்போது வெளிநாட்டில் சினிமா சம்மந்தமான பட்டப்படிப்பை பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.