லியோ படத்தில் தளபதி விஜய் தந்தை யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Sanjay Dutt Role in Leo Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாக படமாகி வரும் திரைப்படம் தான் லியோ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சஞ்சய் தத் உட்பட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சஞ்சய் தத் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியாக இருந்த நிலையில் தற்போது செம ட்விஸ்ட்டான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது இந்த படத்தில் தளபதி விஜய்யின் அப்பாவாக நடிப்பதும் சஞ்சய் தத் தான். அப்பாவி மகனுக்கு வில்லனாக மாறுவது தான் கதை என சொல்லப்படுகிறது. இருவருமே கேங்ஸ்டர்களாக மோதிக்கொள்ள உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.