Sania Mirza

Sania : இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா தற்போது களமிறங்க தயாராக உள்ளார். சமீபத்தில் குழந்தை பிறக்கவே சிறிது காலம் ஓய்வில் இருந்த சானியா தற்போது போட்டியில் பங்கேபெற தயாராகி வருகிறார்.

முழுக்க முழுக்க குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய சானியா தற்போது போட்டியில் கலந்து கொள்ள தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

அதற்கான முதல் கட்டமாக தனது உணவு பழக்கத்தில் சில கட்டுபாடு கொண்டு வந்து இருக்கிறார் சானியா.

குழந்தை பிறந்ததும் உடல் எடையில் 10 கிலோ குறைந்துள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா 2019-ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சர்வதேச டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இன்னும் உடல் எடையை குறைப்பதற்கான, உணவு கட்டுப்பாட்டை தொடங்கியுள்ளார்.

தன் பிரசவத்தைப் பற்றி சானியா என்ன கூறுகிறார்:

“கர்ப்பம் தரிப்பது சுலபம். பிரசவிப்பதுதான் சிரமம். பிரசவ சமயத்தில் அவசரப்பட்டு சிசேரியன் முறையில் குழந்தையை பெற்றெடுக்க விரும்பாமல் சுகப்பிரசவத்திற்காக நான் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

விளையாட்டு விராங்கனை என்பதால் இயற்கையான சுபாவத்தை மாற்ற இயலாது. எதிர்த்து நின்று அந்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டு ஒரு தீர்வை காண வேண்டும்” என்றார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.