அஜித் பட நடிகையை செத்த மூஞ்சி என பத்திரிகைகள் விமர்சித்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் அவர் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்துள்ளார்.

Sangavi Interview About Carrier : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் அமராவதி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அமராவதி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை சங்கவி நடித்திருந்தார்.

பல படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்த சங்கவி ஆரம்பத்தில் பத்திரிக்கையாளர்களிடம் படு மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளார். அதாவது சங்கவி முகத்தில் நடிப்புக்கான கலை கொஞ்சம்கூட இல்லை என விமர்சனம் செய்துள்ளனர். அதைவிட ஒருபடி மேலேபோய் இது செத்த மூஞ்சி என படு மோசமான விமர்சனத்தை பத்திரிக்கைகள் முன்வைத்துள்ளன.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில், திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : முழு விவரம்..

ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் சங்கவி. தன்னை செத்த மூஞ்சி என எழுதிய பத்திரிக்கைகளை டாப் ஹீரோயின் என தன்னுடைய நடிப்பின் மூலம் எழுத வைத்ததாக சங்கவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Online Ticket விற்பனையில் Producer-க்கும் பங்கு தர வேண்டும் – தயாரிப்பாளர் சங்கம் கெடு | TN Theatres