
சண்டக்கோழி 2 படம் வெளியாகி 6 மாதம் முடிவதற்குள்ளேயே சண்டக்கோழி 3 படம் ஆரம்பமாகும் அறிவித்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி.
லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருந்த படம் சண்டக்கோழி. இந்த படத்தின் வெற்றியை அடுத்து 13 வருடங்களுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.
அக்டோபர் 18-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இந்த சந்திப்பில் பேசிய இயக்குனர் லிங்குசாமி சண்டக்கோழி 2 படம் வெளியாகிய ஆறு மாதத்திற்குள்ளேயே சண்டக்கோழி 3 படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.
13 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாகி இருந்தாலும் சண்டக்கோழி 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.