சண்டக்கோழி 2 செம மாஸான படம் கண்டிப்பா தவறாம பாருங்க என நடிகை குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டக்கோழி 2.
இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்த குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தை பற்றிய கருத்தை பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் சண்டக்கோழி 2 செம மாஸான படம், கண்டிப்பா தவறாம பாருங்க என பதிவிட்டுள்ளார். மேலும் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் நடிப்பு அற்புதமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.