விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விஷாலின் சண்டக்கோழி 2 படம் தடைகளை தாண்டி வெளியாக உள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சண்டக்கோழி 2 படம் உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 18-ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.
ஆனால் விலங்குகள் நல வாரியம் சண்டக்கோழி 2 படத்திற்கு தடையில்லா சான்று வழங்காமல் இருந்ததால் பட ரிலீஸ் சந்தேகத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இப்படத்திற்காக தடையில்லா சான்றினை விலங்குகள் நல வாரியம் அளித்துள்ளது. இதனால் தடைகளை தாண்டி சொன்ன தேதியில் சண்டக்கோழி 2 படம் வெளியாக உள்ளது.