சஞ்சிதா ஷெட்டியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவியின் தில்லாலங்கடி என்ற படத்தில் தமன்னாவுக்கு தங்கையாக நடித்து அறிமுகமான நடிகை தான் சஞ்சிதா ஷெட்டி. அதற்குப் பின் விஜய் சேதுபதியின் “சூது கவ்வும்” என்ற வெற்றி படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

அதற்குப் பின் பீசா 2, என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ஜானி, தேவதாஸ் பிரதர்ஸ், வினோதய சித்தம்,பஹீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார்.

தற்போது தனது சினிமா வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவார். அதேபோல் தற்போது ஆரஞ்சு நிற புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.