நடிகை சமீரா ரெட்டி தனது கர்ப்ப காலத்தில் தண்ணீருக்குள் மூழ்கி இருந்தபடி எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய நடிகையான சமீரா ரெட்டி தமிழில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் அழகான தோற்றத்தோடு நடித்து ஆசத்திய சமீரா ரெட்டி பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்திருந்தார். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அஜித்துடன் அசல், விஷாலுடன் வெடி போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

அதையடுத்து அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் எப்போதும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சமீரா ரெட்டி தற்போது தனது கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதாவது அவர் தனது கர்ப்ப காலத்தில் பிகினி உடையில் தண்ணீர் கடியில் இருந்தபடி பலவிதமான போட்டோ ஷூட் செய்து எடுத்து இருக்கும் புகைப்படங்களை தொகுப்பாக இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் அருமையான தருணம் என்று இந்த தொகுப்பின் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். அதோடு கர்ப்ப காலத்தில் நம்முடைய உடலை கொண்டாடுவோம் என்றும் மற்றவர்கள் நம்மை கமெண்ட் செய்ய அனுமதிக்கூடாது என்றும் சமீரா ரெட்டி குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த அதிர்ச்சியான புகைப்படத்தின் தொகுப்பு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.