யசோதா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர்தான் சமந்தா. இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் யசோதா திரைப்படம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வெளியானது.

இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மணி சர்மா இசையமைப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.