விஜய் படத்தை வேண்டாம் என நிராகரித்துள்ளார் நடிகை சமந்தா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வளம் இருப்பவர் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் அட்மின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி மற்றும் மெர்சல் என இரண்டு படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் நாகராஜ் இயக்கத்தில் உருவாக்க உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் பிறகு அந்த படத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியானது.

தற்போது இதற்கான காரணம் என்ன என தெரியவந்துள்ளது. அதாவது நடிகை சமந்தா ஏற்கனவே பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே விஜய் படத்தை நிராகரித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தளபதி 67 படத்துக்கு பிறகு மீண்டும் விஜய், அட்லி கூட்டணி இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.