நடிகை சமந்தா தோல் பிரச்சனை காரணமாக வெளிநாட்டிற்கு சிகிச்சை பெற சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பல ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தையும் பிடித்திருக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். மேலும் இந்தியிலும் கால் பதித்து இருக்கும் சமந்தா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக சமந்தாவின் நடிப்பில் சகுந்தலம், குஷி, யசோதா போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில், தோல் சம்பந்தப்பட்ட நோயால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் நடிகை சமந்தா மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமந்தா Polymorphous Light Eruption என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், சிகிச்சை முடிந்து இந்தியா வந்ததும் அவர் குஷி படப்பிடிப்பில் இணைவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியோடு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.