சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள சமந்தாவின் பதிவு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வளம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் யசோதா திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து குணசேகரன் இயக்கத்தில் புராண கால காதல் கதையாக உருவாகி இருக்கும் சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகை சமந்தா சமீபத்தில் தனது சமூக வலைத்தள வாயிலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாடியுள்ளார். அப்போது சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் சகுந்தலாவின் கதாபாத்திரத்தை எது அதிக அளவில் விவரிக்கிறது?? தெய்வீக அழகா அல்லது உள் வலிமையா என கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு சமந்தா, மாபெரும் பலத்தில் இருந்து தான் தெய்வீக அழகு வருகிறது அதுதான் சகுந்தலா என்று அழகாக பதில் அளித்திருக்கிறார். மேலும் தொடர்ந்து ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள சமந்தாவின் பதிவுகள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.