இந்த பாலிவுட் நடிகருடன் ரொமான்டிக் படத்தில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார் நடிகை சமந்தா.

Samantha About Bollywood Actor : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக தி பேம்லி மேன் 2 என்ற வெப்சீரிஸ் தொடர் வெளியாக உள்ளது. இதில் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். இதன் டிரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமந்தா தீவிரவாதத்தை பேசுவதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இருப்பினும் இந்த நிகழ்ச்சியின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் நடிகை சமந்தா. அப்படியே பேட்டி ஒன்றில் பாலிவுட் நடிகர்கள் யாருடன் ரொமான்டிக் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு சமந்தா பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். ரன்பீர் கபூருடன் ஜோடி சேரும் வாய்ப்பு சமந்தாவுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.