
நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய ‘இந்தியன் ஃபிலிம்’ சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசர் அதிகாலை 5 12 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை படக்குழுவினர் தூண்டினர்.

மேலும் சலார் படத்தின் டீஸர்யை பார்த்து இதில் பிரபாஸ் மட்டும் இல்லையெனில் இது கே.ஜி.ப் படமே தான் என்று இணையதளத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றன, இது அனைத்து சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பகுதி 1 : சீஸ் ஃபயர் எனும் இந்த படத்தில் பிரபாஸ், பிருத்திவிராஜ் சுகுமாறன்., ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாந்த் நீல் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
