Sakshi Agarwal valentine's Day celebrate to unsupported children's

காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்.

Sakshi valentine’s Day celebrate to unsupported children’s : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.

மேலும் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதால் ஒரு பிசியான நடிகையாக இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துவரும் சாக்ஷி அகர்வால் கவர்ச்சிப் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.
இதனால் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இப்படியான நிலையில் சாக்ஷி அகர்வால் காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

அவர்களுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து அவர்களுடன் மகிழ்ச்சியாக காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருவது மட்டுமல்லாமல் சாக்ஷி அகர்வாலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.