இந்த ஆண்டிற்கான சைமா விருது விழாவில் தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்கு மூன்று விதமான விருதுகளை வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் கர்ணன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படத்தில் அவருடன் இணைந்து லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம் மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தில் பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் இப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

மூன்று விருதுகளை தட்டிச் சென்ற கர்ணன் திரைப்படம்!!! படு குஷியில் தனுஷ் ரசிகர்கள்!.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் SIIMA விருதுக்கான விழா நேற்று முன்தினம் பெங்களூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, சிவா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மூன்று விருதுகளை தட்டிச் சென்ற கர்ணன் திரைப்படம்!!! படு குஷியில் தனுஷ் ரசிகர்கள்!.

அப்பொழுது அந்நிகழ்ச்சியில் தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்காக மூன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை சந்தோஷ நாராயணன் வென்றார். சிறந்த துணை நடிகைக்கான விருதை லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமெளலி வென்றார். சிறந்த பின்ணனி பாடகிக்கான விருதினை தீ வென்றுள்ளார் ஆனால் அவர் சார்பாக அந்த விருதினை சந்தோஷ் நாராயணன் பெற்றுக்கொண்டார். மொத்தம் கர்ணன் திரைப்படம், 3 சைமா (2022) ஆம் ஆண்டிற்கான விருதிகளை பெற்றுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.